மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்….* திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி..!
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு சென்றவர்களால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம். மாற்றம் வேண்டும் என்பதற்காக தவறான அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள். தற்போது வருத்தப்படுகிறார்கள். சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தரம் தாழ்ந்து பேசுகிறார். மிசா சட்டம் என்பது இந்திரா காந்தி கொண்டு வந்த மிக மோசமான சட்டம். அதில் ஸ்டாலின் உட்பட பலர் சிறைக்கு சென்றார்கள். சிறைக்கு சென்றவர்களை காவல்துறையினர் தாக்கினார்கள். அதை பழித்து காட்டும் வகையில் விஜய் பேசி உள்ளார். சினிமாவில் தான் விஜய் ஹீரோ. நிஜத்தில் அவர் வில்லன் என்பது அவர் பேசுவதிலும், உடல் மொழியிலும் தெரிகிறது. ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. நெல் கொள்முதல் செய்ய முடியாமல் இந்த அரசு உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் மக்கள் அதிமுக விற்கு ஏற்கனவே ஆதரவு அளித்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். இடைத்தேர்தலில் த.வெ.க அரசிற்கு அவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். அதிமுகவில், அமமுக இணைய உள்ளது என்கிற செய்தியில் துளியும் உண்மையில்லை. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது நல்ல யோசனை தான். இதுகுறித்து கூட்டணி தலைமையிடம் பேசுவேன். அவர்கள் தான் முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார் .

Comments are closed.