Rock Fort Times
Online News

கொளத்தூர் த.வெ.க. எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி…!

சென்னை, கொளத்தூர்  தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, மூச்சுத் திணறல் காரணமாக இன்று(10-09-2026) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வி.எஸ். பாபுவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக வேட்பாளராக களமிறங்கி, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் வி.எஸ். பாபு. ஏற்கெனவே கடந்த 2006 பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வி.எஸ். பாபு வெற்றி பெற்றுள்ளார். பின்னர், அதிமுகவில் இணைந்து 10 ஆண்டுகள் பயணித்த அவர், தவெக தொடங்கியவுடன் அக்கட்சியில் இணைந்து கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் வி.எஸ். பாபு பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்