Rock Fort Times
Online News

சட்டம்-ஒழுங்குதான் பொருளாதாரத்தின் அடிப்படை…!* சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சு…

செப்டம்பர் 3-ல் முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற நிலையில், அதற்கான பதிலுரையை இன்று (செப். 7) வழங்கவுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது:- மாநிலத்தின் முன்னேற்றம் சாலைகள், தொழிற்சாலைகளால் மட்டும் அமைவதில்லை. சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி மேம்படும். குற்றத்தை பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். குற்றம் நடந்துவிட்டது என்பதால் மட்டுமே, ஒட்டுமெத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீரந்துவிட்டது எனக் கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவங்களுக்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம், ஒழுங்கிலும் வேறுபாடு உள்ளது. தெருவில் நடைபெறும் குற்றங்களுடன் மட்டும் முடிவதில்லை, நாம் டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைந்துவிட்டோம். அதனால் சைபர் குற்றங்களும் நவீன சட்டம், ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன என பதிலுறையில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்