Rock Fort Times
Online News

அமைச்சரை அவமதித்தாரா ரம்யா கிருஷ்ணன்? நீலாம்பரி கேரக்டரை வைத்து நெட்டிசன்கள் கமெண்ட்…!

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் அவர் நடித்த ‘நீலாம்பரி’ கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் ராஜ்மோகன் வரும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் தனது இருக்கையில் அமர்ந்தபடி வணக்கம் செலுத்திவிட்டு, பிறகு கால்மேல் கால் போட்டுக்கொண்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அமைச்சரை நீலாம்பரி ஸ்டைலில் கவனித்ததாக இணையதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது. மற்றொரு தரப்பினரோ
அவர் அமைச்சரை அவமதித்தார் என்று சொல்வது சரியாக இருக்காது. அவர் அமர்ந்தபடியே வணக்கம் சொல்லிவிட்டு, தனது அருகில் இருந்த நடிகையுடன் பேச தொடங்கிவிட்டார். ஆனால் அவர் கால் மேல் கால் போட்டு பேசியது படையப்பா நீலாம்பரி கேரக்டரை நினைவுபடுத்த விட்டது என்றும் கூறி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்