நாளை ஆசிரியர் தினம்: 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குகிறார் அமைச்சர் ராஜ்மோகன்…!
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 389 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு நாளை(05-09-2026) சென்னையில் விருது வழங்கப்படுகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கும் விழாவிற்கு பள்ளிக்கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்குகிறார். பள்ளிக்கல்வி இயக்குனர் லதா வரவேற்கிறார்.
விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி சிறப்பு ரையாற்றுகிறார். முடிவில் தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் நன்றி கூறுகிறார்.

Comments are closed.