திருச்சியில் வருகிற 6-ம் தேதி திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்…* முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை..!!
தி.மு.கழக முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- வருகிற 06.09.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், எஸ்.ஏ.அம்பிகாபதி, கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, க.வைரமணி, முன்னாள் எம்எல்ஏ ந. தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் தலைமைக் கழகத்தின் சார்பாக முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, வேடசந்தூர் எம். எல்.ஏ. சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு, மத்திய. வடக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். மாவட்டப் பிரதிநிதிகள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இக்கூட்டத்தினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.