Rock Fort Times
Online News

காவல் துறையில் 29,108 பணியிடங்கள் உருவாக்கப்படும்…* முதல்-அமைச்சர் விஜய்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று (03-09-2026) காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும். போதைப்பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும். ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும். நடப்பாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு எதிர்பாரா செலவீனம் உயர்த்தப்படும். வண்டலூரில் உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் உள் விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்