Rock Fort Times
Online News

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து நெல் மணிகளை தூவிய முதல்வர் விஜய்…!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று (செப். 1) தண்ணீர் திறந்து வைத்த முதல்வர் விஜய், பூக்கள் மற்றும் நெல்மணிகளை தூவினார். இன்று முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்த முதல்வர் விஜயை அமைச்சர்கள் ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணை திறக்கும் விழாவுக்கு காரில் புறப்பட்டார்.


செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், சேலம் மேச்சேரி அருகில் வந்த முதல்வர் விஜய் அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி சாலை வலம் மேற்கொண்டார். கூடியிருக்கும் மக்களைப் பார்த்து கையசைத்தார். மக்களும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.  சேலத்திற்கு முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்