Rock Fort Times
Online News

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா… * கொடியேற்றத்துடன் தொடங்கியது!

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. ‘கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்’ என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (29-08-2026) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடி ஏற்றினார். தொடர்ந்து, திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெறுகிறது. தொடர்ந்து, நாளை (30-ந்தேதி) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. தேர்பவனியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, 8-ந்தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்று காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு. கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடைகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்