ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவது தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில், கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் முக்கிய அறிவிப்பு ஒன்றைச் சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார். ரேஷன் பொருட்கள் பெற பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட கடைக்கே செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கடைகளுக்கு வரும் சிலர் ரேஷன் கார்டை மறந்து விட்டு வந்து விடுகின்றனர். இனிமேல் நேரில் கார்டு கொண்டுவர வேண்டிய கட்டாயமில்லை. கார்டின் சாஃப்ட் காப்பி (Soft Copy) அல்லது அட்டை எண் (Ration Card Number) இருந்தால் போதுமானது. பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு சரியாக இல்லாததால், இந்தத் தகவலைத் தெரிவிப்பதாக அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

Comments are closed.