Rock Fort Times
Online News

அந்த 3 துறைகளின் பைலை முதல்வர் எப்போது திறப்பார்? ஜோசியக்காரர் சொன்னால் தான் திறப்பாரா?..* உதயநிதி கேள்விக்கு ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் சூடான பதில்..!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கியது. இதில் பொது மற்றும் வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7-ந் தேதி பட்ஜெட் மீதூன விவாதங்கள் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 17 முதல், மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இன்றைய (21-08-2026) கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, முதல்வர் பேசும்போது, தனது டேபிளில் 3 துறைகளின் பைல்கள் இருப்பதாக சொன்னார். தயவு செய்து அதை திறக்க சொல்லுங்கள், ஜோசியக்காரர் சொன்னால் தான் திறப்பாரா? இதை திறக்க என்ன பயம் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நாங்கள் மிசாவை பார்த்தவர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். ஆனால் அவர்களையே வீழ்த்தி வெற்றி பெற்றவர் எங்கள் தலைவர். அந்த பைல்களை முதல்வர் உரிய நேரத்தில் திறந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என்று பதில் அளித்தார்.

மஞ்சள் துண்டு எதற்காக?

அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஜோசியம் பற்றி சொன்னார். ஜோசியம் பார்த்து உங்கள் தலைவர் மஞ்சள் துண்டு போட்டது எங்களுக்கும் தெரியும். எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்