சவுதியில் இறந்த மீனவர் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர கூட தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை…* வெளிநடப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!
சவுதி அருகே ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் மயிலாடுதுறை மாவட்டம், தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்தார். மேலும் 3 மீனவர்கள் படுகாயம் அடைந்து சவுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக அதிமுக சார்பில் தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த தீர்மானம் இன்று(19-08-2026) எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சீர்காழி மீனவர் கொலை குறித்து கவன ஈர்ப்பு கொடுத்து 5 நாட்களாக எடுக்கவில்லை. மீனவர் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர கூட தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, சட்டப்பேரவையில் பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றனர். அதிமுக, திமுக என எந்த அரசாங்கமாக இருந்தாலும் உடனடியாக கவன ஈர்ப்பை கொண்டு வருவார்கள். ஆனால் இந்த அரசுக்கு தமிழ் உணர்வு என்பதே இல்லை” என கடுமையாக சாடினார்.

Comments are closed.