Rock Fort Times
Online News

முதல்வர் அறை மாற்றம் டெண்டரில் விதிமீறல்:* எ.வ. வேலு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி…!

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், நாமக்கல் மாளிகையை கட்டிக் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். அங்கு இப்போது முதலமைச்சர் விஜய் செல்கிறார். யார் எங்கு செல்வது என்பது அவர்களுடைய விருப்பம். பிரபல பத்திரிகை ஒன்றில் இந்த டெண்டரில் எதோ கோளாறு இருக்கிறது என்று கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் கேட்க விரும்புவது ஏன் அந்த அறையில் இருந்து பணியை பார்க்க வேண்டியது தானே? நாமக்கல் மாளிகையை முழுமையாக எடுத்துக் கொண்டால் நாங்கள் எங்கே செல்வது என்று அதிகாரிகள்
புலம்புகிறார்கள். அதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார். இந்த கேள்விக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளிக்கையில், தற்போதைய முதலமைச்சர் அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதுடன், அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை.100 பேர் கூட அமர்ந்து பணியாற்ற முடியாத சூழல். முதலமைச்சரின் தனிச் செயலர்கள் 100 சதுர அடிக்கும் குறைவான சிறிய அறைகளில் பணியாற்றுவதுடன், முறையான கழிவறை வசதிகூட இல்லை. அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் தொடர்ந்து சந்திப்புகளை நடத்தி வருவதால், கூடுதல் இடவசதி தேவைப்படுவதாக விளக்கமளித்தார். புதிய அறைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்