3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணை தேவை… * எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்!
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். “மான் வேட்டையில் ஈடுபட்டதால் கொல்லப்பட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மிகப்பெரிய சதி இருப்பதாக கொல்லப்பட்டவர்களின் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும். உயரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கர்நாடக அரசு அறிவித்துள்ள 5 லட்சம் நிவாரண நிதி மிகக்குறைவு. எனவே தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி உதவியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மனித உரிமை மீறல்,
திமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்:-
தமிழர்கள் எங்கே பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் எங்கள் கழகத் தலைவர். இது மனித உரிமை மீறல். இது ‘Fake என்கவுண்டர். இந்த விவகாரத்தில் தெளிவான நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்றார்.
கணேஷ்குமார் (பா.ம.க.):-
துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை. இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றார்.
தாரகை கட்பட்( காங்கிரஸ்):-
இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மனித உயிருக்கு விலை இல்லாமல் போய்விட்டது. தமிழர்கள் என்றாலே இளக்காரமான பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்றார்.
தளி ராமச்சந்திரன் (இ. கம்யூனிஸ்ட்):-
கர்நாடக வனத்துறையினரின் இந்த அராஜக போக்கை இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதோடு, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு தலா ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்றார்.
இதேபோல மேலும் சில எம்எல்ஏக்களும் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

Comments are closed.