தென்காசியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: மாவட்ட கலெக்டர் ரஞ்சித்சிங் கொடியேற்றி மரியாதை…* எஸ்.பி. அசோக் குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு..!
இந்திய திரு நாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல தென்காசி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்சித்சிங் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் காவலரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து தேசியக்கொடி நிறத்திலான வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார். தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் கௌரவித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.