இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி, சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீக் தயாள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து வண்ண பலூன்களையும், சமாதானத்திற்காக வெண்புறாக்களையும் வானில் பறக்கவிட்டார். காவல் துறையினரின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
சுதந்திர போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். மேலும், அரசுத்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த 313 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 460 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகளை காவல்துறை அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.



Comments are closed.