Rock Fort Times
Online News

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் …* பொதுமக்கள் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில், கிராம மக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் (2025-26-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விபரம்), தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் தொழிலாளர் வரவு-செலவு அறிக்கை குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும். இக்கிராம
கூட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்