Rock Fort Times
Online News

‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து…!

சென்னை கிண்டியில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டு நிகழ்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்கும் வகையில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் மாநிலத்தில் வேலைவாய்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகிறது.மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது:-

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் முதலீட்டுக்கான நம்பகமான மாநிலமாக முதல் இடத்தில் உள்ளது. 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன. ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஒரு லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளன. 2036-ம் ஆண்டுக்குள் 1.5 அமெரிக்க டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை முதல்-அமைச்சர் நிர்ணயம் செய்துள்ளார். வேலைக்காக யாரும் சொந்த ஊரை விட்டு செல்லக்கூடாது என்பதே இலக்கு. 21 நாட்களில் தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் தொழில் பரிமாணங்கள் இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக மாற்றப்பட உள்ளது. இன்றைய முதலீடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எங்களுடைய பாதையை காட்டுகிறது. “வெற்றி தமிழ்நாடு 2026 ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்