Rock Fort Times
Online News

“போதை இல்லா தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்றுக்கொண்ட திருச்சி கல்லூரி மாணவர்கள்…* மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு..!

தமிழகத்தில் போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கில், “போதை இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பிலான மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தவகையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயள் தலைமை தாங்கி, மாணவர்களுடன் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் டோங்ரே, மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்