நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்: முன்மொழிந்தார், அமைச்சர் அருண்ராஜ்…!
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை முன்மொழிந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், “ஏற்றத்தாழ்வுகளை நீட் தேர்வு அதிகரித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறையால் தனியார் பயிற்சி மையங்களே பலன் பெறுகின்றன. கிராமப்புற அரசு பள்ளி மாணவர், விவசாயி பிள்ளைகள் அதே அளவிலான பயிற்சியை பெற முடியுமா?. சமூக நீதியை பாதிக்கும் சமவாய்ப்பை குறைக்கும் எந்த ஒரு தேர்வையும் ஏற்க முடியாது என்பதே நம் கொள்கை. பேரவையின் ஒருமித்த குரலை மத்திய அரசு மதிக்க வேண்டும். மாநில உரிமையை மதிப்பதே கூட்டாட்சி கொள்கை. நீட் தேர்வு முறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு முறைகேடுகளால் மாணவர்கள் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை நீட் தேர்வு இழந்துள்ளது. இந்த தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

Comments are closed.