Rock Fort Times
Online News

தமிழக சட்டமன்றத்தில் செல்போனை பார்த்து படித்த அமைச்சரை கண்டித்த சபாநாயகர்…!

தமிழக சட்டமன்றத்தில் கடந்த5-ம் தேதி பொது பட்ஜெட்டும், 6ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்களோ, உறுப்பினர்களோ செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது விதியாகும். ஆனால், இன்றைய கூட்டத்தொடரில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தனது செல்போனை பார்த்து படித்தார். இதைக் கண்ட அவைத் தலைவர், உடனடியாகக் குறுக்கிட்டு, அவை உறுப்பினர்கள், பேரவைக்குள் செல்போன் கொண்டு வரக் கூடாது. அதுவும் அதைப் பார்த்து படிப்பது தவறு. இனி இதுபோன்று செய்ய வேண்டாம் என்று கண்டித்ததோடு அடுத்த எம்எல்ஏவை பேச அழைத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்