Rock Fort Times
Online News

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் தீர்வாகாது; சட்டம் இயற்ற வேண்டும் – ரகுபதி…!

தமிழக சட்டமன்றத்தில் இன்று(10-08-2026) தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதல்வர் விஜய்
கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதுதொடர்பாக முன்னாள் திமுக அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ரகுபதி கூறுகையில், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. எல்லா நிகழ்ச்சிகளிலும் முதலிலேயே தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும். ஆனால் ஆளுநர் அல்லேக்கர் வந்து தமிழ் தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இருக்கிறார். வெறும் தீர்மானம் தீர்வாகாது, அதுக்கு சட்டம் இயற்றுவது மட்டுமே தீர்வாகும். வேண்டுமென்றால் பள்ளிகளில் பாடி கொள்ளலாமே தவிர அரசு நிகழ்வுகளில் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. திமுக செய்தது போல சட்டபூர்வமான முன்னெடுப்பை இந்த அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்