Rock Fort Times
Online News

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு பதவி வழங்கிய முதல்வர் விஜய்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 6 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தனர். தவெகவில் இணைந்தவர்களுக்கு படிப்படியாக கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றைய தினம்(08-08-2026) டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளராகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அமைப்பு செயலாளராகவும், இசக்கி சுப்பையா தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளராகவும், துணை பொதுச்செயலாளர்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், மதுராந்தகம் மரகதம் குமரவேல், நாங்குநேரி ராஜகோபால், அம்பா சமுத்திரம் ஜாகிர் உசேன், பல்லாவரம் குமார், சிங்காநல்லூர் யுவராஜ், திருப்போரூர் தினகரன், ஆவடி கே.மணிகண்டன், வீரபாண்டி ஆர். எஸ்.மணிகண்டன், திருவெறும்பூர் அருள்ராஜ், தூத்துக்குடி சாமுவேல் ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு கழக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான ஜோசப் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்