தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 7) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், திமுகவில் இருக்கும் பார்லிமென்ட் எம்பிக்கள் மதுபான தொழிற்சாலை நடத்துகிறார்கள். திமுகவின் பொருளாளர் மது தொழிற்சாலை நடத்துகிறார் என்றார். உடனே நீங்கள் ஏன் லாட்டரி தொழில் நடத்துகிறீர்கள் என திமுகவினர் கூச்சலிட்டனர். இதன்பிறகு அமைச்சர் ஆதவ், லாட்டரி நிறுவனத்திடம் ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன், தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள் என்றார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி , அமைச்சர் திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதனை கொடுத்தது அவருடைய மாமனார் தான். ஏன் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றார். அதற்கு அமைச்சர் ஆதவ், அதுகுறித்து உமது அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். உமது அப்பாவை இங்கே காணோம், வீட்டிற்கு போய் கேளுங்கள். ஏன் வாங்கினார் என்று உங்கள் அப்பா, சரியாக சொல்லுவார் என்று ஆதவ் பேசினார். இவ்வாறு விவாதம் நடந்தது.
அதன்பின் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது. தொழில் என்ற அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்றுதான் திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல் இயக்கங்களுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு என கூறினார். அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு கே.என்.நேரு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தால் அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது.

Comments are closed.