தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத்தில் பேசுகையில், விருதாச்சலம் தொகுதியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். நெல் அறுவடை செய்யப்பட்டு சாலைகளில் கிடக்கிறது. அதனைப் பத்திரப்படுத்த வேண்டும். நெல் கொள்முதலை இன்னும் இந்த அரசு செய்யவில்லை. இப்போது மழை தொடங்கியிருக்கிறது. குளங்களைத் தூர்வாருங்கள். தடுப்பணைகள் கட்டுங்கள், நீரை சேமியுங்கள். மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்துகிறார்கள். காவிரி பிரச்சனைக்கு அனைத்து கட்சி உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்தார், விஜயகாந்த். அதுபோல அனைத்து உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று
பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. முதல்வர் பெங்களூர் செல்ல வேண்டும் என்று நான்தான் கூறினேன். அவர் போக முயற்சி செய்தார், அவர் வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் கூறிவிட்டார். அங்குதான் சூழ்நிலை சரியில்லை. கர்நாடக முதல்வர் இங்கு வரலாம், வந்து பிரச்சனைக்கு தீர்வு காணலாம். முதல்வர் அங்கு சென்று அவமரியாதை ஏற்பட்டால் என்ன ஆவது? என்று நினைக்கிறார்கள். முதல்வரே உங்களுக்கு ஒரு தலைகுனிவு வந்தால் தமிழ்நாடு வெகுண்டெழும். அப்படியே நாங்கள் விட்டு விடுவோமா என்ன? மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உபரிநீர் வேண்டாம். எங்களது உரிமைதான் எங்களுக்கு வேண்டும் என்று பேசினார்.

Comments are closed.