முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் இன்று(05-08-2026) தாக்கல் செய்யப்பட்டது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 14,830 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரேஷன் கடைகளில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும். புதிய மாநில வீட்டு வசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்திற்கான அரசு மானியம் ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். முதல் ஆண்டிலேயே 7000 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும். புதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ. 12,646 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நெய்தல் மீட்சி இயக்கத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மகளிருக்காக சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம் தொடங்கப்படும். இதில் ரூ.5 லட்சம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். இந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ. 38,000 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும். தமிழகத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை,
அறங்காவலர்கள் இல்லாத கோயில்களில் அவர்களை நியமனம் செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1000 ஆண்டுகள் பழமையான 213 கோயில்கள் புனரமைக்கப்படும். மேலும், இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 708 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு ரூ. 354 கோடி,
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு ரூ. 354 கோடி ஒதுக்கீடு. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காவலர் குடியிருப்புக்காக ரூ. 431 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.

Comments are closed.