Rock Fort Times
Online News

முதல்வர், நடிகை திரிஷா குறித்து சர்ச்சைப் பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…!

தஞ்சாவூரில் நேற்று(03-08-2026) திமுக சார்பில், த. வெ.க.அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்து
பேசினார். மேலும் அவர், முதல்வர் விஜய் குறித்தும், நடிகை திரிஷா குறித்தும் பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக த.வெ.க. மகளிரணியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீஸார், உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு:

சட்டப்பிரிவுகள் 196, 192, 352, 79, 296(பி), 61 மற்றும் 351(2) பிஎன்எஸ், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் (The Tamil Nadu Prohibition of Harassment of Women Act) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 67, அதாவது பாலியல் சார்ந்த கருத்துக்களை வெளியிடுதல் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக போலீஸார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்