தஞ்சாவூரில் நேற்று(03-08-2026) நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்களை இழிவு படுத்து வகையில் பேசியதாக திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிர் அணியினர் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சாவூர் டிஎஸ்பி அழகேசன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அடங்கிய குழுவினர் சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்றனர். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதியை கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதை அறிந்ததும், அவரது வீட்டு வாசலில் திமுகவினர் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தடுப்புகளை கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்னை உயர் போலீஸ் அதிகாரிகளும் வருகை தந்தனர். பின்னர் காலை 11 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவரை காவல் வாகனத்தில் ஏற்றி தஞ்சாவூருக்கு போலீசார் அழைத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

Comments are closed.