Rock Fort Times
Online News

உதயநிதியை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் விதித்த கெடுவை நிராகரித்த தமிழ்நாடு காவல்துறை…!

தஞ்சையில் நேற்று(ஆகஸ்ட் 3) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டார். உதயநிதியை கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதை அறிந்ததும், அவரது வீட்டு வாசலில் திமுகவினர் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தடுப்புகளை கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனிடையே, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திமுக தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. அப்போது வழக்கு நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்படும் எனவும், அதுவரை இந்த வழக்கில் கைது உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டியதில்லை எனவும் அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு  இருந்தது. அதனை மதிக்காமல் போலீசார் உதயநிதியை கைது செய்து வேனில் ஏற்றி தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்