Rock Fort Times
Online News

ஆலம் ஷெல்டர்ஸூடன் இணைந்து திருச்சியில் 5 ஸ்டார் ஹோட்டல் அமைக்கிறது, ஐ.ஹெச்.சி.எல் நிறுவனம்…! 

தமிழகத்தில், தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக வளரும் நகரங்களின் பட்டியலில் திருச்சி மிக முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. மத்திய மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும்,திருச்சியில் உள்ளதோடு, தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்தும் 5 மணி நேரத்தில் திருச்சியை வந்தடைய முடியும் என்பதால், பல கார்ப்பரேட் நிறுவனங்களும், 5 ஸ்டார் ஹோட்டல்களும், திருச்சியில் தங்களது கிளைகளை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், ஐ.ஹெச்.சி.எல் எனப்படும் இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட், திருச்சி, திருவானைக்கோவிலில் புதிதாக 5 ஸ்டார் ஹோட்டல் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை திருச்சியின் பிரபல கட்டுமான நிறுவனமான ‘ஆலம் ஷெல்டர்ஸ்’ மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மாதங்களில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ள ஐ.எச்.சி.எல் 5 ஸ்டார் ஹோட்டலின் சிறப்பம்சங்கள் குறித்து இந்நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டு பிரிவு செயல் துணைத் தலைவர் சுமா வெங்கடேஷ் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது; தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களை போல தற்போது திருச்சியும் வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே இங்கு எங்களது பைவ் ஸ்டார் ஹோட்டலை நிறுவ திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் வணிகம், கல்வி, ஆன்மீக பயணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக திருச்சிக்கு வருபவர்களுக்கு உயர்தர தங்கும் அனுபவத்தை கொடுக்க முடியும். மொத்தம் 176 அறைகளுடன் கட்டமைக்கப்படவுள்ள இந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் நீச்சல் குளம், பார்ட்டி ஹால், விசாலமான பார்க்கிங் போன்ற பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்