Rock Fort Times
Online News

திருச்சியில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரி கையும், களவுமாக சிக்கினார்…!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் எட்வர்ட். இவர் முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளுவதற்கு நீர்வளத்துறை ஆய்வாளர் லோகநாதன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவரோ வண்டல் மண் எடுப்பதற்கு ரூ.4000 லஞ்சம் கேட்டுள்ளார்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வர்ட், இதுதொடர்பாக திருச்சி மாவட்ட, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், எட்வர்ட்ரிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பி வைத்தனர். பின்னர் காவல் ஆய்வாளர் பாலமுருகன், சக்திவேல் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக ஓர் இடத்தில் மறைந்திருந்தனர்.
அப்போது எட்வர்டிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.4 ஆயிரத்தை புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளர் லோகநாதன் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்