Rock Fort Times
Online News

‘நீட்’ தேர்வு விவகாரம்: மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா திடீர் ‘வாய்ஸ்’…!

மருத்துவ படிப்பிற்கான நீட்’ வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் மதிப்பெண் குளறுபடிகளால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்குப் நடிகை ஜோதிகா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் நிற்கிறேன்! பொறுப்புக்கூறல், ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தப்பட்ட கல்விக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்” , மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், இப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், சி.ஜே.பி. அமைப்பின் அபிஜித் திப்கே மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரின் துணிச்சலான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “ஒரு தாயாக, எங்கள் பிள்ளைகளும் உங்களைப் போல அச்சமின்றியும்
நேர்மையாகவும் வளர வேண்டும் என்று விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்