Rock Fort Times
Online News

மத்திய அரசுக்கு எதிராக திருச்சியில் போராட்டம்… 15-க்கும் மேற்பட்டோர் கைது

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, டெல்லியில் நடைபெற்று வரும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் திருச்சியில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்