தமிழகத்தில் இன்று(22-07-2026) 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்டத்திற்கும், சிவகங்கை எஸ்.பி ஆர்.சிவப்பிரசாத் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி ஆயுதப்படடை டி.ஐ.ஜி விஜயலட்சுமி, சென்னை ஊர்காவல்படை டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி எஸ்.பி சண்முகப்பிரியா சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக எஸ்.பியாகவும், ராமநாதபுர ஏ.டி.எஸ்.பி மீரா டி.ஜி.பி அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Comments are closed.