த.வெ.க.ஆட்சியை ஆதரித்தால் ஏசி அறையில் சோபா, எதிர்த்தால் சிறை கொட்டடியா..? திமுக எம்எல்ஏ கைதுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்..!
விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முதலமைச்சர் விஜயை ஒருமையிலும், சட்டமன்றத்தில் அவரது எலும்பை உடைப்பேன் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்து த.வெ.க. நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று(ஜூலை 20) கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சி.எம்.சார்,
ஆக்டர் விஜய் தலைமையிலான அரசு, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்துள்ளது. த.வெ.க.ஆட்சியை ஆதரித்தால் ஏசி அறையில் சோபா, எதிர்த்தால் சிறை கொட்டடியா ? இந்த மாதிரியான அதிகார வன்முறை இனிமேலும் தொடரக் கூடாது. மார்க்கண்டேயனை விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.