Rock Fort Times
Online News

மணப்பாறை, பெரம்பலூர் உட்பட நகராட்சி நிர்வாக துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து…* முதல்வர் விஜய் அதிரடி..!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட டெண்டர்கள் குறித்து துறை வாரியாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில், முறைகேடான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் பல்வேறு நகராட்சியின் கீழ் விடப்பட்ட 50 குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து முதல்வர் விஜய் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார். அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சியின் 30 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கோத்தகிரி, செங்கம், பெரம்பலூர், திருவள்ளூர், மணப்பாறை, திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதில், கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணி, வாரச் சந்தை கடைகள், புதிய போர்வெல் அமைக்கும் பணி உள்ளிட்ட டெண்டர்கள் அடங்கும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்