Rock Fort Times
Online News

தமிழக முதல்வர் விஜயுடன் மத்திய இணை அமைச்சர் திடீர் சந்திப்பு…!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜயை, மத்திய இணையமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சியின் (அத்வாலே பிரிவு) தலைவருமான ராம்தாஸ் அத்வாலே இன்று (17-07-2026) சந்தித்து பேசினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில், சமூக நீதி சங்கமம் என்ற நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே சென்னை வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் அவர், முதல்வர் விஜயை சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களது சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராம்தாஸ் அத்வாலே, விஜய் என்.டி.ஏ கூட்டணியில் இணைவார் என்றும், தேர்தலுக்குப் பிறகு அவரது ஆதரவைப் பெறுவோம் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்