Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பதி பாஸை மொத்தமாக லபக்கிய த.வெ.க.வினர்…* அதிர்ச்சியில் கோவில் ஊழியர்கள்..!

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு ஆடி மாத பிறப்பு அன்று சீர் மற்றும் மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோயில் சார்பாக வழங்குவது
ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு. இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அனுப்பி வைக்கப் படுகிறது. இந்த வருடம் இந்த சீர் கொண்டு செல்லும் நபர்களுக்கு வழங்கப்படும் திருப்பதி தரிசன பாஸ்
முழுவதையும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக தவெக வினர்
சுமார் 80 பாஸ்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால், ஸ்ரீரங்கம்
தேவஸ்தான ஊழியர்கள், கோவில் ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். ஆகவே, வழக்கம் போல கோவில் ஊழியர்களுக்கு பாஸ் கிடைக்க சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்