Rock Fort Times
Online News

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் காமராஜர் திருவுருவச் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை…!

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று(ஜூலை 15) திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு, கழக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார், கழக நிர்வாகிகள் தர்மன் ராஜேந்திரன், துரைராஜ், கருணை ராஜா, டோல்கேட் சுப்பிரமணி, முத்துசெல்வம், விஜயா ஜெயராஜ், கருணாநிதி, தொ.மு.ச. மாவட்ட அமைப்பாளர் குணசேகர், மோகன்தாஸ், பாலசுப்பிரமணியன், கிராப்பட்டி செல்வம், கமால் முஸ்தபா, ராமதாஸ், சோழன் சம்பத், கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, வீரமணி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்