Rock Fort Times
Online News

த.வெ.க. குதிரைபேரம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும்…* லஞ்சஒழிப்புத் துறைக்கு தி.மு.க. பரபரப்பு கடிதம்…!

நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக​வுக்கு அறு​திப் பெரும்​பான்மை கிடைக்​க​வில்​லை. இதைத்​தொடர்ந்​து, திமுக கூட்​ட​ணி​யில் வெற்றி பெற்ற காங்​கிரஸ், விசிக, ஐயூஎம்​எல் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்​தது. அதி​முக​வின் ஒரு பிரிவு எம்​எல்​ஏக்​களும் தவெக அரசுக்கு ஆதர​வான நிலைப்​பாட்டை எடுத்​தனர். இதன் தொடர்ச்​சி​யாக அதி​முக​வில் இருந்து விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​. ​விஜய​பாஸ்​கர், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்​பை​யா, மது​ராந்​தகம் மரகதம் குமார​வேல், பெருந்​துறை ஜெயக்​கு​மார், தாராபுரம் சத்​தி​ய​பாமா ஆகிய எம்​எல்​ஏக்​கள் தங்​களது பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.
குதிரை பேரம் நடத்தி அதி​முக எம்​எல்​ஏக்​களை தவெக விலைக்கு வாங்​கி​விட்​ட​தாக அக்கட்சியின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​டி​னார். இது தொடர்​பாக திமுக, பாஜக தரப்​பில் இருந்தும் ஆளுநரிடம் தனித்​தனியே புகாரும் அளிக்கப்பட்டது.

பரபரப்பு புகார் கடிதம்,

இந்தநிலையில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் இன்று(13-07-2026) ஒரு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்
இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு;

  • தி.மு.க. எம்.எல்.ஏ.ஆஸ்டினிடம் த.வெ.க.வினர் குதிரைபேரம் நடத்தியுள்ளனர்.
  • அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து த.வெ.க.வில் இணையுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
  • கட்சியில் மாற த.வெ.க.வினர் தன்னை அணுகியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
  • ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு முதலமைச்சர் கூறியதாக வைகோ பேசி உள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்