Rock Fort Times
Online News

திருச்சி – காரைக்கால் ரெயில் நாளை(ஜூலை 11) ரத்து…

திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பொன்மலை ஜங்ஷனில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், திருச்சியில் இருந்து செல்லும் சில ரெயில்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி., திருச்சி – காரைக்கால் டெமு ரெயில் நாளையும்(11.07.2026), திருச்சி -திருப்பாதிரிப்புலியூர் டெமு ரெயில் நாளை மற்றும் 12-ந் தேதியும். காரைக்கால் – திருச்சி டெமு ரெயில் நாளையும். தஞ்சாவூர் – திருச்சி பாசஞ்சர் ரெயில்வருகிற 13-ந்தேதியும், காரைக்கால் – திருச்சி டெமு ரெயல் வருகிற 15-ந்தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15-ந்தேதி திருச்சியை தவிர்த்து மதுரை, மானாமதுரை. காரைக்குடி, திருவாரூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்