Rock Fort Times
Online News

2000 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு…!

இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டு 2000 ரூபாய் நோட்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், சில்லறை தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டது. இது பண மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதன் முக்கிய நோக்கம், சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிப்பதாகும். அந்தவகையில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.47 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி( ஆர்.பி.ஐ.) தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்பிஐ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளை நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று எவ்வித சிரமமும் இன்றி மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, நேரடியாக வர முடியாதவர்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை தபால் மூலமாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தால், அந்த நோட்டுகளுக்கான சரியான மதிப்பு அவர்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் ஆர்பிஐ விளக்கியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்