முதல்வர் விஜய் கரூர் செல்வதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி… * நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கண்டிப்பு !
முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தவெகவினர் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கக் கூடாது மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் விஸ்வநாதன், ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு அவசர வழக்காக இன்று (07-07-2026) எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், “கரூர் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தாங்கள் தடைசெய்த பத்திரிகைகளில் அறிக்கைகளை வெளியிடுவதன் தங்களைக் காத்துக்கொள்ள முயற்சிக்கும் நோக்கில் – ஒரு கதையை உருவாக்குகிறார்கள் என்ற உண்மையை நான் நம்பியிருக்கிறேன்” என வாதிட்டார். அப்போது, குறிக்கிட்ட நீதிபதி விஸ்வநாதன், “முதல்வரின் செய்தியை உச்ச நீதிமன்றம் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு ரஞ்சித்குமார் எனது கோரிக்கையை சற்று பாருங்கள் என்றார். அதற்கு நீதிபதி விஸ்வநாதன், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட வழக்கில், அரசியல் எதிராளியின் அறிக்கையின் பேரில் உச்ச நீதிமன்றம் எப்படி ஒன்றன்பின் ஒன்றாக உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்? கருணை அடிப்படையிலான நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன., இது எப்படி ஒரு
பிரச்சனையாக இருக்கும்.
இன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் முதலமைச்சர் குற்றவாளியாக இல்லை. இந்த நீதிமன்றத்தை ஒரு அரசியல் களமாக மாற்றுவதற்காக முயற்சி செய்கிறீர்களா? உங்கள் சண்டைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இந்த மனுவை, நீங்கள் இங்கு வலியுறுத்தாமல் இருப்பதே நல்லது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்யவே நாங்கள் விரும்புகிறோம் என்றார். அதனைக் கேட்டு திமுக வழக்கறிஞர், நாங்கள் முழு சுதந்திரத்துடன் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். திமுக தொடர்ந்த
மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் வருகிற 10ம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதில் எந்த மாற்றமும் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.

Comments are closed.