நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததால் அந்த கட்சியின் தலைமை மீது அதிருப்தி அடைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகிய 4 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அண்மையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து இன்று(29-06-2026) கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா
செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் வழங்கினார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணையக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது கட்சித் தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Comments are closed.