Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர் மணிமேகலை ராஜபாண்டி இல்ல காதணி விழா… * முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு!

திருச்சி மாநகராட்சி 13- வது வார்டு திமுக கவுன்சிலராக செயல்பட்டு வருபவர் மணிமேகலை ராஜபாண்டி. மலைக்கோட்டை பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டு வரும் இவரது மகன் குணா ராஜபாண்டி – கௌசிகா தம்பதியரின் குழந்தை செல்வன்.ஜி.ஹர்ஷமித்ரன் பாண்டியின் காதணி விழா திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள ராசி மஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார். திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினர், நண்பர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்