தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 23) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு இதுவரை மௌனம் காத்து வந்த முதல்வர், இன்று சட்டப்பேரவையில் ஆவேசமாக பதில் அளித்தார். கடந்த ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது என்று பேசினார். அவரது உரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க வேண்டும் என குறுக்கிட்டு பேசினார். இதையடுத்து, சபையில் கடும் அமளி நிலவியது. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். cvils evils என்று Devils பேசக்கூடாது எனக்கூறிய முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சைகையை சபாநாயகரிடம் அனுமதி பெற்று செய்து காட்டினார். இதனால் சட்டப்பேரவை அதிர்ந்தது.
குட்டிக்கதை,
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒரு குட்டிக்கதை கூறுவதற்கு முதல்வர் அனுமதி கேட்டார். பேரவைத் தலைவர் அனுமதி அளித்த நிலையில், முதல்வர் கதையைக் கூறினார். அதில், “ஒரு ஊருல பெரியவர் ஒருவர் வெயில் அதிகமாக இருப்பதாக தெரிவித்து கண்ணில் கைவைத்து தேடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன், என்ன தேடுறீங்க என்று கேட்க, அந்த பெரியவர், “உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க…. அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்க அப்பாவைக் காணோம்” என்று கூறி முடித்தார். எங்களுக்கும் நக்கல், நையாண்டியாக பேசத் தெரியும், சம்பந்தமில்லாத குட்டிக்கதையை எங்களுக்கும் பேசத் தெரியும். அந்தக் கதையில் பெரியவர் அப்படி கூறினார். யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்” என்றார்.

Comments are closed.