டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை…* முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு…!
ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று(23-06-2026) சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர்
விஜய் தனது பதில் உரையை வழங்கினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் அளிக்காமல் மௌனம் காத்த முதல்வர் விஜயின் பேச்சால் இன்று சட்டமன்றமே அதிர்ந்தது.
தமிழ்நாட்டில் கருவூலம் தேய்ந்து ஓய்ந்துள்ளது. நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். இதுபோன்ற நிலைமை உருவாக்கி வைத்துவிட்டு நமக்கு ஆட்சி செய்ய தெரியாது என்று கூறுகிறார்கள். ஆமாம் எங்களுக்கு தெரியாது தான்; எங்க சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு மக்கள் பணியை செய்ய தெரிந்த அளவிற்கு மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது. அன்றைக்கும் சொன்னேன், இன்றைக்கும் சொல்கிறேன் மக்கள் பணத்தை தொட மாட்டோம் தொடவும் விடமாட்டேன். இதற்கு முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம். தோண்ட தோண்ட ஏராளமாக வரும் போல இருக்கே. எங்கள் தயவில் தான் உங்கள் ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறார்கள். உங்கள் தயவில் ஆட்சி அமையவில்லை. மக்கள் தயவில் ஆட்சி அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் ஏன் கதறுறீங்க… நிறைய பேர் நடுங்குறாங்க… டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை நடந்துள்ளது என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.

Comments are closed.