Rock Fort Times
Online News

சட்டமன்றத்தில் மௌனம் கலைத்த முதல்வர் விஜய்… எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி…!

தமிழக சட்டமன்றத்தில் இன்று(23-06-2026) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் பதிலுரையாற்றினார். இதில் தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்து அதிரடி காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கருவூலம் தேய்ந்து ஓய்ந்துள்ளது. நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். இதுபோன்ற நிலைமை உருவாக்கி வைத்துவிட்டு நமக்கு ஆட்சி செய்ய தெரியாது என்று கூறுகிறார்கள். ஆமாம் எங்களுக்கு தெரியாது தான்; எங்க சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு மக்கள் பணியை செய்ய தெரிந்த அளவிற்கு; மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த சாமானியர்கள் ஆட்சி மாதிரி, எம்ஜிஆர் தலைமையில் அமைந்த மிக சாமானியர்கள் ஆட்சி மாறி, அதே வரிசையில் விஜய் உடைய மிக மிக சாமானியர்களின் ஆட்சியாக அமைந்துள்ளது.
2026 தேர்தலில் மதத்தை உடைத்தோம். சாதியை உடைத்தோம். இது வெறும் ஆரம்பம் தான். மக்கள் கொஞ்சம் அவகாசம் தாங்க. ஒவ்வொரு துறையிலும் ஏராளமான ஓட்டைகள் போடப்பட்டுள்ளது. அதை அடைத்து கொண்டு மக்களுக்கு நல்லது செய்வோம். நம்முடைய ஆட்சிக்கு தேதி குறிக்கிறார்கள். அவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் என்ன செய்தோம் என்று சொன்னவர்களுக்கு சில உதாரணம். மதுபான கடை மூடப்பட்டது, சிங்கப்பெண் சிறப்பு படை, மருத்துவத்துறைக்கு 40 புதிய வாகனங்கள், ஜல் ஜீவன் திட்டம் கொண்டுவரப்பட்டது; சட்ட விரோத கல்குவாரி கனிம வளங்கள் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது, பல்வேறு குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது வெறும் சாம்பிள் தான்; 40 நாளில் இவற்றையெல்லாம் செய்துள்ளோம். இன்னும் அதிகமாக நிறைவேற்றுவோம். இரண்டரை ஆண்டில் ஆட்சியை பிடித்துவிட்டார்கள் என சிலர் நக்கலாக பேசுகிறார்கள். அதில் நாம் எந்த அளவு பிரச்சனைகளை சந்தித்தோம் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்