நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததால் அந்த கட்சியின் தலைமை மீது அதிருப்தி அடைந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் திருச்சி மாநகர் மாவட்டம், மலைக்கோட்டை பகுதி அ.இ.அ.தி.மு.கழக மலைக்கோட்டை பகுதி செயலாளர் மேல சிந்தாமணி எல் .முத்துக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் முன்னிலையில் தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார்.

Comments are closed.