தமிழக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். சங்கர் ஜிவால் தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் சங்கர் ஜிவால் தனது பதவியை இன்று( ஜூன் 17) திடீரென ராஜினாமா செய்தார். பதவியேற்ற 9 மாதங்களே ஆகும்நிலையில், தற்போது ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன் தீயணைப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் நமச்சிவாயம், சத்தியமூர்த்தி, விக்ரம் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல சீருடை பணியாளர்கள் வாரிய தலைவர் பதவியில் இருந்து சுனில்குமார் ராஜினாமா செய்தார்.
மேலும் , தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அபய்குமார் சிங்கும் ராஜினாமா செய்தார். அவர்கள் என்ன காரணத்திற்காக ராஜினாமா செய்தார்கள் என்பது தெரியவில்லை. ஒரே நேரத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி விலகியது தமிழக அரசியல் வட்டாரத்திலும், காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.